கண்கலங்கிய சூப்பர் ஸ்டார்! படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டு..!

 
1

தீபாவளியை முன்னிட்டு அமரன், பிரதர், பிளடி பெக்கர் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் வெளியானாலும் அதில் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் மட்டுமே பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. அமரன் படம் முதல் நாளில் சுமார் 42 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
 

அடுத்தடுத்த நாட்களிலும் வசூலில் கலக்கி வருகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமரன் படக்குழுவினரை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டியுள்ளார். அது சம்மந்தமான புகைப்படங்களை வெளியிட்டுள்ள அமர பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேந்திரன் “அவர்கள் தனது நண்பர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்தைப் பார்த்து மகிழ்ந்தார். நேற்று தனது நண்பர் கமல்ஹாசன் அவர்களை தொலைபேசியில் அழைத்த சூப்பர் ஸ்டார் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார். அத்துடன், அமரன் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன், ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட அமரன் படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவித்தார்.” எனக் கூறியுள்ளார்.



 

From Around the web