உயிருக்கு போராடிய பொன்னம்பலம் - உதவிக்கரம் நீட்டிய சூப்பர்ஸ்டார்..!

 
1

வில்லன் கதாபாத்திரங்களில் பெரிதும் பேசப்பட்டவர் நடிகர் பொன்னம்பலம். ஸ்டண்ட் மேனாக திரையுலகில் கால் பதித்தவருக்கு அவரின் உழைப்பே படத்தின் முக்கிய வில்லன் பாத்திரத்தை கொண்டு வந்து சேர்த்தது என்பதில் சந்தேகமேதுமில்லை.

சிறிது காலத்திற்கு முன் உடல் நலம் குன்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொன்னம்பலம் சக நடிகர்களின் உதவியை நாட வேண்டிய தேவையை காலம் அவருக்கு கொடுத்திருந்தது.பெரும்பாலும் அவருடன் நடித்த நடிகர்கள் அவருக்கான உதவியை செய்ய முன்வந்தனர்.

இக் கால கட்டம் பற்றி தற்போது ஓப்பனாக பேசிய பொன்னம்பலம் தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தனக்கு செய்த உதவி குறித்து பேசும் போது அவர் "ஒன்றோ இரண்டோ  லட்சங்கள் கொடுப்பார் என எண்ணியிருக்க ஒட்டுமொத்த மருத்துவ செலவையும் அவரே ஏற்று, சுமார் 40 லட்சம் ரூபாய் தனக்காக செலவிட்டதாக" கூறி கண்கலங்கியிருந்தார்.

From Around the web