மீண்டும் சிறப்பு தோற்றத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி..!

 
1

2008இல் வெளியான குசேலன் படத்திற்கு பிறகு சிறப்பு தோற்றத்தில் நடிப்பதை தவிர்த்து வந்த நடிகர் ரஜினிகாந்த, தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்காக கொள்கையை தளர்த்திக்கொண்டு லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை எனக் கூறப்படும் நிலையில், தற்போது தனது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதாகவும், படத்தை கலைப்புலி எஸ்.தாணு இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், படத்திற்கான கதையை ராகவா லாரன்ஸே எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, சௌந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தில் நடித்த ரஜினிகாந்த், தற்போது அவரது படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், அனைத்தும் உறுதிசெய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

மேலும், லால் சலாம் படத்திற்கு 12 நாட்கள் கால்ஷீட் கொடுத்த ரஜினிகாந்த், இந்த படத்திற்கு 20 நாட்கள் கால்ஷீட் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், படம் முழுக்க வரும் முக்கிய வேடத்தில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web