சென்னை திரும்பினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..! 

 
1

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் “ஜெயிலர்”. இப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகிறது  ஏராளமான முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்களை படக்குழு ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “லால் சலாம்” திரைப்படத்திலும் தனக்கான படப்பிடிப்பு நடித்து முடித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் சிறிய ட்ராவல் பேக்வுடன் ஓய்விற்காக மாலத்தீவுக்கு ட்ரிப் சென்றிருந்தார்.

அதன் புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாகி வந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி இன்று 28ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருப்பதால் மாலத்தீவில் இருந்து ட்ரிப்பை நிறைவு செய்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பி இருக்கிறார். அதன் புகைப்படங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.


 

From Around the web