திடீரென சொந்த ஊர் சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!
 

 
1

ஜெயிலர் சக்சஸ் பார்ட்டியில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், படக்குழுவினருடன் கேக் வெட்டி இந்த வெற்றியை கொண்டாடினார். இன்னொரு பக்கம் லைகா தயாரிப்பில் ரஜினி நடிக்கும் தலைவர் 170 படத்தின் பூஜையும் சைலண்டாக நடந்து முடிந்தது. இதனிடையே பழசை மறக்காத ரஜினி, இரு தினங்களுக்கு முன்னர் பெங்களூர் ஜெயநகரில் உள்ள மாநகர அரசு போக்குவரத்து கழகம் சென்றிருந்தார்.

அங்கு ஆரம்பகாலத்தில் தான் பணியாற்றிய பணிமனையை பார்வையிட்ட ரஜினி, தனது பழைய நண்பர்களையும் சந்தித்தார். இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அதன்பின்னர் அங்கிருந்து தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தார் ரஜினி. கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சத்யநாராயண ராவ் கெய்குவாட் உடன் விசிட் செய்தார். அப்போது அவருடன் சேர்ந்து தனது அம்மா, அப்பாவின் நினைவிடத்தில் பூஜை செய்து வழிபட்டார்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் ரஜினி தனது அம்மா, அப்பா நினைவிடம் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் தனது அம்மா, அப்பாவின் நினைவிடத்தில் அவர்களுக்கு கோயில் கட்ட ரஜினி முடிவு செய்துள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது திடீரென சொந்த ஊர் சென்ற ரஜினிகாந்த், அம்மா, அப்பா நினைவிடத்தில் நீண்டநேரம் அமர்ந்திருந்து மரியாதை செய்துள்ளார். இந்த புகைப்படங்களை ரஜினியின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


 

From Around the web