கோட் பட இயக்குனருடன் கைகோர்க்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..?
Oct 21, 2024, 06:35 IST
முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இயக்குனர் வெங்கட் பிரபு இணையவிருக்கிறாராம். மேலும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கப்போவதாக சொல்லப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து கடந்த வாரம் வேட்டையன் படம் வெளிவந்தது.
இப்படத்தின் வெற்றியை கொண்டாடிய நிலையில், மற்றொரு படமும் தங்களுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு பண்ணி தரும்படி ரஜினியிடம் லைகா நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்களாம்.

இதுவரை ரஜினிகாந்த் - லைகா கூட்டணியில் 2.0, தர்பார், லால் சலாம் மற்றும் வேட்டையன் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, லைகா - ரஜினிகாந்த் இணையும் அடுத்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு என்கின்றனர் நெட்டிசன்கள்.
 - cini express.jpg)