சூரி, சூர்யா படங்கள் இருக்கும் போது வெப் சிரீஸ் இயக்கும் வெற்றிமாறன்..!

 
வெற்றிமாறன்

சூரி மற்றும் சூர்யா நடிக்கும் படங்களுக்கு பிறகு வலை தொடர் ஒன்றை இயக்குவதற்கான ஆயத்தப் பணிகள் வெற்றிமாறன் இறங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் மூன்றாவதாக முறையாக தேசிய விருது வென்ற இயக்குநர் வெற்றிமாறன். முன்னதாக காதல் கோட்டை படத்துக்காக அகத்தியன் மற்றும் நான் கடவுள் படத்துக்காக பாலா ஆகியோருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

2011-ம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்தை இயக்கியதற்காக வெற்றிமாறனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் இயக்கும் ஒவ்வொரு படமும் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் தாக்கத்தையும் உருவாக்கின.

வடசென்னை படத்தை தொடர்ந்து சூரி நடித்து வரும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை முடித்தவுடன் சூர்யா நடிக்கும் படத்தை அவர் இயக்குகிறார்.

’வாடிவாசல்’ என்கிற பெயரில் தயாராகும் இப்படம், அதே பெயரில் வெளியான நாவலை தழுவி உருவாக்கப்படுகிறது. இப்படத்திற்கான பணிகள் இந்தாண்டு இறுதியில் துவங்கும் என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து வெப் சீரிஸில் வெற்றிமாறன் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இவருடைய வெப் சிரீஸை ஜி5 இணையதளம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web