முதல் முதலாக ‘அண்ணாத்த’ படம் குறித்து சூரி வெளியிட்ட அப்டேட்..!

 
முதல் முதலாக ‘அண்ணாத்த’ படம் குறித்து சூரி வெளியிட்ட அப்டேட்..!

ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படம் குறித்து நடிகர் சூரி புதிய அப்டேட்டை வழங்கியுள்ளார். அதுதொடர்பான விபரங்களை பார்க்கலாம்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘அண்ணாத்த’. இதில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, யோகி பாபு, ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தேசிய விருது வென்ற டி. இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

முன்னதாக இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியது. பிறகு கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு, பல மாதங்களுக்கு பிறகு சென்னையில் தொடங்கப்பட்டது. இதில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.

தற்போது மீண்டும் படக்குழுவினர் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளனர். இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சூரி நடிகர் ரஜினிகாந்தை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

படப்பிடிப்பில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். எப்போதும் வேகமாக தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்து விடுவார். அவருடன் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என நடிகர் சூரி குறிப்பிட்டுள்ளார். கொரோனா காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட போது, ரஜினிக்கு உயர் ரத்த அழுத்த பிரச்னை ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் பலர் அவருடைய உடல்நிலை குறித்து கவலை அடைந்தனர்.

தற்போது சூரி அளித்துள்ள பேட்டி காரணமாக அவருடைய உடல்நிலை நல்ல நிலையில் உள்ளது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. சிறுத்தை படத்தை முடித்தவுடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

From Around the web