தள்ளிப்போகும் ‘சூர்யா 42’ அப்டேட் .!! என்ன ஆச்சு..??

suriya 42 update will be given on april 16 instead of april 14th
 
1

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ படத்தின் அப்டேட் வெளியாகும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது படத்தை எதிர்பார்த்து காத்துக்கிடந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மிகவும் மாறுபட்ட கதையமைப்பு கொண்ட படமாக சூர்யா 42 தயாராகி வருகிறது. இதனுடைய மோஷன் போஸ்டரே மிகவும் மிரட்டலாக இருந்தது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குவது தான் எல்லாவற்றையும் விட ஆச்சரியமாக இருந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பு பின்னணியில் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

அதற்காக கோவா, கேரளா, எண்ணூர் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்துக்கான ஷூட்டிங் நடைபெற்றன. ஏப்ரல் மாத இறுதிக்குள் படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிக்கப்பட்டு, வரும் மே மாதம் படத்தின் டீசர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் திஷா பதானி, மிருனாள் தாக்கூர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

தமிழ்நாட்டின் முற்பகுதியில், அதாவது 1678-ம் ஆண்டு வாழ்ந்த ஒரு மாபெரும் வீரன் கொடிய நோயினால் உயிரிழக்கிறான். அந்த நோயை நிகழ் காலத்தில் வாழும் ஒரு ஆய்வு மாணவி, மீண்டும் கண்டுப்பிடிக்கிறாள். இதற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் சூர்யா 42 படத்தின் கதைக்களம். 

பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை, நடிகர் சூர்யாவின் சித்தி மகனான கே.இ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளராக வெற்றிப் பழனிசாமி மற்றும் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்துக்கான ஓ.டி.டி உரிமையை பலநூறு கோடி கொடுத்து அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக சூர்யா 42 படத்தின் அப்டேட் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்டது. ஆனால் இப்போது இரண்டு நாட்கள் தள்ளிவைக்கப்பட்டு, அப்டேட் ஏப்ரல் 16-ம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்பதால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 


 

From Around the web