டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பாராட்டிய சூர்யா..கண்கலங்கிய இயக்குனர்..!

 
1
சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படமும் வெளியானது. அறிமுக இயக்குனரான அபிஷேன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ஆகியோரது நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

ஸ்மால் பட்ஜெட் படமாக வெளியான இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு காரணம் இப்படத்தின் ட்ரைலர் தான். டூரிஸ்ட் ஃபேமிலி ட்ரைலரை பார்க்கும்போதே இப்படம் கண்டிப்பாக ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இப்படமும் அனைத்து விதமான ரசிகர்களை கவர்ந்து மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.


கிட்டத்தட்ட இப்படம் தற்போது வரை 75 கோடி வசூலித்துள்ளது. மேலும் படத்திற்கு பாசிட்டிவான டாக் இருப்பதால் கண்டிப்பாக நூறு கோடி வசூலை இப்படம் பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் படத்தை பார்த்த பல திரைபிரபலங்கள் இப்படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்துவிட்டு இயக்குனருக்கு போன் செய்து மனதார பாராட்டினார்.

இதனை இயக்குனர் அபிஷேன் தன் சோஷியல் மீடியா பக்கத்தில் எமோஷனலாக தெரிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தை சூர்யா பார்த்துவிட்டு படக்குழுவை அழைத்து மனதார பாராட்டியுள்ளார். இயக்குனர் அபிஷேன் உட்பட படக்குழுவை அழைத்து சூர்யா பாராட்டியிருக்கிறார். இதைப்பற்றியும் இயக்குனர் அபிஷேன் ஜீவிந்த் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


சூர்யா சார் என்னை அழைத்து பாராட்டியதை நினைத்து ஆனந்த கண்ணீர் வந்துவிட்டதாக மிகவும் எமோஷனலாக பதிவிட்டு இருந்தார் அபிஷேன். இந்நிலையில் என்னதான் சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் படக்குழு அழைத்து பாராட்டுவது மிகப்பெரிய விஷயம் என சூர்யாவின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தை தொடர்ந்து சூர்யா 45 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஆர்.ஜெ பாலாஜி இப்படத்தை இயக்க த்ரிஷா இப்படத்தில் நாயகியாக நடித்து வருகின்றார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


இதைத்தொடர்ந்து ஜூலை மாதம் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா 45 படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகும் என்றும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரையில் வெளியாகும் என்றும் தகவல்கள் வருகின்றன. ஆனால் இதைப்பற்றியெல்லாம் இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

From Around the web