மிகவும் குண்டாக மாறிப்போன சூர்யா- அதிர்ச்சி தரும் புகைப்படம்..!!
சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதுவொரு ஃபேண்டஸி பின்னணியில் டைம் டிராவல் கொண்ட படமாக தயாராகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் மும்பை மற்றும் கோவாவை சுற்றி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் ஜோதிகாவின் தாயாரும் உடல்நிலை குன்றிய நிலையில் இருக்கிறார். அவரை கவனித்துக்கொள்ள தற்போது நடிகர் சூர்யா, ஜோதிகா மும்பைக்கு குடிப்பெயர்ந்துவிட்டனர். அதனால் சூர்யாவுக்கு கங்குவா படப்பிடிப்பிலும் எளிதாக பங்கேற்று வர முடிகிறது.
அண்மையில் சூர்யா ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஜோதிகாவும் உடன் இருக்கிறார். ஆனால் சூர்யா பார்ப்பதற்கு வேறு மாதிரி இருக்கிறார். மிகவும் அஜானுபாகுவாகவும் உடல் எடை கூடியும் இருக்கிறார். இப்படிப்பட்ட தோற்றத்தில் அவரை இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.
சூர்யா இந்த புதிய தோற்றம் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கங்குவா படத்துக்கு வேண்டி அவர் தனது தோற்றத்தை மாற்றி இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக கங்குவா படத்தின் ப்ரோமோ மற்றும் டைட்டில் போஸ்டர் போன்றவை வெளியிடப்பட்டாலும், சூர்யாவின் இந்த தோற்றம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.