அயூத பூஜையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் தரும் சர்பரைஸ்..!

 
சிவகார்த்திகேயன்

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டி நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு சர்பரைஸ் தரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படம் கடந்த வாரம் வெளியானது. எதிர்பார்த்ததை விடவும் படத்துக்கு சிறப்பான ரெஸ்பான்ஸ் ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது.

இந்த படம் வெளியான இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 27 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா நெருக்கடிக்கு இடையில் டாக்டர் படம் வெற்றி அடைந்துள்ளது படக்குழுவை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

இதே சூட்டுடன் சூட்டாக சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்தின் அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வரும் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்த படத்திலும் டாக்டர் பட நாயகர் ப்ரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சூரி, சமுத்திரகனி, பாலசரவணன், விஜய் டிவி புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

வழக்கமான சிவகார்த்திகேயன் ஃபார்மூலாவில் இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இன்னும் சில தினங்களில் படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைகிறது. அதை தொடர்ந்து இறுதிக்கட்ட பணிகள் துவங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

From Around the web