’கலக்கப்போவது யாரு’ சரத்துக்கு மனைவி கொடுத்த ஆச்சரிய அன்பளிப்பு..!

 
சரத் மற்றும் கிருத்திகா

விஜய் டிவியில் பிரபல காமெடியன்களில் ஒருவரான சரத்துக்கு அவருடைய மனைவி அளித்துள்ள ஆச்சரிய அன்பளிப்பு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியின் ஆரம்பக்கட்ட ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் சரத். மொட்டை ராஜேந்திரன் குரலில் மிம்கிரி செய்வதன் மூலம் தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே பிரபலமானார்.

அதை தொடர்ந்து ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் பல்வேறு சீசன்களில் கலந்துகொண்டார். தொடர்ந்து தன்னுடைய இயல்பான நகைச்சுவை மற்றும ஆர்ப்பாட்டமான உடல்மொழி மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக சரத் வந்தார். அங்குள்ள கோமாளிகளில் சமைக்க தெரிந்த மற்றும் டாஸ்குகளை தைரியமாகவும் குதூகலமாகவும் செய்யக்கூடிய ஒரே கோமாளியாக அவர் இருந்தார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் மனைவி கிருத்திகாவுடன் பங்கேற்று வருகிறார். இந்நிகழ்ச்சியில் இந்த ஜோடி செய்யும் நகைச்சுவை அம்சங்கள் ரசிகர்களை கவர தவறுவது கிடையாது.

இந்நிலையில் சரத்துக்கு அவருடைய மனைவி கிருத்திகா மாருதி சுஸுகி டிசையர் காரை பரிசாக வழங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதியதாக கார் வாங்கியுள்ள சரத், கிருத்திகா தம்பதிக்கு வி.ஜே. ரக்‌ஷன், விஜய் டிவி புகழ், நடிகர் மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர்.

From Around the web