சர்வைவர் நிகழ்ச்சியால் வி.ஜே. பார்வதிக்கு நேர்ந்த கொடூரம்..!
சமீபத்தில் சர்வைவர் ரியாலிட்டி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வி.ஜே. பார்வதி, அந்த ஷோவால் தனக்கு ஏற்பட்ட மாற்றம் குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல யூ ட்யூப் சேனல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்ததன் மூலம் பிரபலமானவர் வி.ஜே. பார்வதி. மக்களிடம் கருத்து கேட்கும் இவருடைய நிகழ்ச்சி சமூகவலைதளவாசிகளிடம் மிகுந்த பிரபலமாக உள்ளது.
முன்னதாக இவர் குக் வித் கோமாளி சீசன் 2-வில் கோமாளிகளில் ஒருவராக கலந்துகொண்டார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் பிரபலமான கோமாளிகள் ஏற்கனவே இருந்ததால், இவருடைய காமெடி டிராக் வரவேற்பு பெறவில்லை.
அதை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘சர்வைவர்’ நிகழ்ச்சி பங்கெடுத்தார். ஆனால் தற்போது இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பார்வதி நிகழ்ச்சிக்கு முன்பு இருந்ததைவிட தற்போது அவருடைய சருமம் முற்றிலும் மாறியுள்ளது. இவருடைய சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 - cini express.jpg)