கர்ப்பம் ஆனதை அறிவித்த சூர்யா பட நடிகை..!

 
11

கன்னட திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ப்ரணிதா, தமிழில் அருள்நிதி நடித்த ’உதயன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்தி நடித்த ’சகுனி’, சூர்யா நடித்த ’மாஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்த ப்ரணிதா, ’எனக்கு வாய்த்த அடிமைகள்’ ’ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் ’உள்ளிட்ட தமிழ் படங்களில் படங்களில் நடித்தார்.

மேலும் அவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார் என்பதும் தற்போது கூட அவர் ஒரு மலையாள மற்றும் ஒரு கன்னட படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி பிரபல தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இன்ஸ்டாகிராமில் 6 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்து பிரபலமாக இருக்கும் ப்ரணிதா, அவ்வப்போது தனது குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்து வந்த நிலையில் தற்போது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் தனது பேண்ட் சேரவில்லை என்று கூறி மீண்டும் கர்ப்பம் ஆனதை உறுதி செய்து உள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

From Around the web