சூர்யாவுக்கு,அஜித்துக்கு இருக்கிற மனசு... விஜய்..எல்லாம் கிடையாதா? விளாசும் நெட்டிசன்கள்!

 
சூர்யாவுக்கு,அஜித்துக்கு இருக்கிற மனசு... விஜய்..எல்லாம் கிடையாதா? விளாசும் நெட்டிசன்கள்!

 

முதல்வரின் கொரோனா நிதிக்கு நடிகர் சூர்யா குடும்பத்தினர் ரூ. 1 கோடி நிதியுதவி அளித்ததை தொடர்ந்து பல்வேறு திரை பிரபலங்கள் திரையுலக பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கொடூர வைரஸால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.

இந்த கொரோனா பேரிடரை சமாளிக்க முதல்வரின் நிவாரண நிதிக்கு உதவி செய்யுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டனர். அப்போது முதல் ஆளாக வந்து ரூ. 1 கோடிக்கான காசோலையை நடிகர் சூர்யா குடும்பத்தினர் முதல்வரிடம் வழங்கினர்.

அதை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை கொரோனோ நிவாரண நிதிக்காக வழங்கினார்.நடிகர் அஜித் குமார் ரூபாய் 25 லட்சம் அளித்துள்ளார். 

தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் நிதியுதவி அனுப்பி வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அவர்களை பற்றி விபரங்களை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் முதல்வர் தரப்பில் இருந்து நிவாரண நிதி கேட்ட பின்பும் திரையுலகத்தினர் பலர் அதற்கு செவி சாய்க்காமல் இருப்பது மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது. 

நிவாரண நிதி கொடுப்பது கூட அவர்களுடைய தனிப்பட்ட முடிவு. ஆனால் முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு ஒரு வாழ்த்து கூட அவர்கள் இன்னும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் முதல்வரின் நிவாரண நிதிக்கு நட்சத்திரங்கள் பலர் நன்கொடைகள் வழங்குவார்கள் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

From Around the web