புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் கண்கலங்கிய சூர்யா..!
Nov 5, 2021, 14:30 IST
மறைந்த புனித் ராஜ்குமார் நினைவிடத்துக்கு சென்ற நடிகர் சூர்யா, அவருடைய சமாதிக்கு மரியாதை செலுத்தினார்.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29-ம் தேதி மாரடைப்பால் காலமானார். இளம் வயதில் அவர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்தது. அவருடைய திடீர் மறைவால் நாடே சோகத்தில் மூழ்கிறது. பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
தமிழ் நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரபு, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் தனித்தனியாக சென்று புனித் ராஜ்குமார் சமாதியில் இறுதி மரியாதை செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யா, புனித் ராஜ்குமார் சமாதியில் கண்கலங்கி அஞ்சலி செலுத்தினார். மேலும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் கூறினார்.
 - cini express.jpg)