பாலா படத்தை உறுதி செய்த சூர்யா..!

 
சூர்யா, பாலா மற்றும் சிவக்குமார்

இருபது ஆண்டுகளுக்கு பிறகு பாலா இயக்கும் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று நடிகர் சூர்யா சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் சூர்யாவுக்கு பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை. அப்போது வெளியான படம் தான் நந்ததா. பாலா இயக்கத்தில் வெளியான இந்த படம் சூர்யாவை வேறொரு பரிமாணத்தில் ரசிகர்களிடம் கொண்டு சென்றது.

அதற்கு பிறகு சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி இடத்துக்கு வந்தார். கடந்த 2000-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் பிதாமகன் படத்தில் நடித்தார். இது சூர்யாவின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சூர்யா நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றார்.


கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலா - சூர்யா கூட்டணி இணைந்துள்ளது. இம்முறை சூர்யா தயாரிக்கும் படத்தை பாலா இயக்கவுள்லார். அதர்வா முரளி ஹீரோவாக நடிக்கும் இப்படத்துக்கு ஜி.வி. பிர்காஷ் இசையமைக்கிறார்.

மேலும் இந்த படத்தில் சூர்யா ஒரு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இப்படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சூர்யா, தந்தை சிவகுமார் ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன். அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

From Around the web