பாலிவுட் சினிமாவில் கால்பதிக்கும் சூர்யா- அதுவும் புதிய அவதாரத்தில்..!

 
சூரரைப் போற்றுபடத்தில் சூர்யா

நடிகர் சூர்யா பாலிவுட் சினிமாவில் கால்பதிக்கவுள்ள செய்தி வெளியாகி கோலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. சுதா கொங்குரா இயக்கத்தில் வெளியான இப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

தற்போது இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் 2டி எண்டரியின்மெண்ட் சார்பில் படத்தை தயாரித்த நடிகர் சூர்யா தான், இந்தியிலும் தயாரிக்கவுள்ளார்.

விரைவில் படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவுள்ளன. சூரரைப் போற்று திரைப்படம் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான இருக்க வேண்டும் என நினைப்பதால் இந்தியில் ரீமேக் செய்வதாக சூர்யா தெரிவித்துள்ளார்.

From Around the web