சூர்யா பட நடிகை திடீர் திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள்!

 
1

நடிகை லிஜோமோல் ஜோஸ் திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகில் 2019ல் வெளியான சிவப்பு மஞ்சள், பச்சை படத்தில் நாயகியாக அறிமுகமானவர் லிஜோமோல் ஜோஸ். இவர் இந்த படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தது பலரின் கவனத்தை ஈர்த்ததுடன் பெருமளவு பாராட்டுக்களும் பெற்றுத் தந்தன.

இவர் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ படத்தில் நடித்து வருகிறார். ஓடிடியில் நவம்பர் மாதம் 2ம் தேதி வெளியாக உள்ள நிலையில் மலையாளத்திலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

திடீரென கேரளாவை சேர்ந்த அருண் ஆண்டனிக்கும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே கலந்து கொண்ட நிலையில் திரைத்துறைக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை லிஜோமோல் தனது திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தமது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

From Around the web