சூர்யா - கவுதம் மேனனின் ஆந்தாலஜி படத்தின் தலைப்பு அறிவிப்பு..!

 
சூர்யா மற்றும் கவுதம் மேனன்

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக உருவாக்கப்பட்டு வரும் ஆந்தாலஜி படத்தில் கவுதம் மேனன் - சூர்யா கூட்டணி உருவாகும் படத்திற்கான தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் மற்றும் விளம்பர பட இயக்குநர் ஜெயந்திரர் ஆகியோருடைய கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘நவரஸா’. மொத்தம் 9 கதைகள் கொண்ட இந்த படத்தில் ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.

அதன்படி நவரஸா படத்தின் ஒரு கதையை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். 27 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படத்தில் சூர்ய கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரயாகா மார்டின் என்பவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு 12 ஆண்டுகள் கழித்து கவுதம் மேனன் - சூர்யா கூட்டணி இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்படத்துக்கு ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மிக பரபரப்பாக இப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் துவங்கியுள்ள இந்த படத்தின் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தும் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்கள் குடும்பத்துக்கு வழங்கப்படவுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவரஸா ஆந்தாலஜி படம் ரிலீஸாகவுள்ளது.

From Around the web