'எதற்கும் துணிந்தவன்' பாடலில் முருகராக காட்சியளிக்கும் சூர்யா..!!

 
1

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் நடித்த சூர்யா தற்போது இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 'டாக்டர்' பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். 

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து  இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இரண்டாவது ரொமான்டிக் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. உள்ளம் உருகுதய்யா என துவங்கும் இந்த பாடலில் விதவிதமான கெட்டப்பில் சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் தோன்றி ரொமான்ஸ் செய்துள்ளனர்.பாடலில் சூர்யா முருகன் வேடத்தில் காணப்படுகிறார். மன்னர் வேடத்திலும் காணப்படுகிறார். இந்தப் பாடலுக்கு யுகபாரதி பாடல் வரிகள் எழுதியுள்ளார்.  

From Around the web