கருத்து சுதந்திரத்தை காப்பாற்றுவதற்கு தான் சட்டம்- கொந்தளிக்கும் சூர்யா..!

 
நடிகர் சூர்யா

திரைத்துறையை நெறிப்படுத்தும் ஒளிப்பரப்பு சட்டத்திருத்த வரைவு மசோதாவுக்கு எதிராக நடிகர் சூர்யா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

நாட்டில் திரைத்துறை செயல்பாடுகளை நெறிப்படுத்தும் விதமாக நான்கு திருத்தங்களை ஒளிப்பதிவு சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதனால்  படைப்புச் சுதந்திரம் பறிபோகும் என பல்வேறு திரைப்பட கலைஞர்கள் கருத்து முன்வைத்து வருகின்றனர்.

அண்மையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், ஒளிப்பரப்பு சட்டத்திருத்த வரைவு மசோதாவுக்கு தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் ட்விட்டரில் இதுதொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காகத்தான். அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல என்று தெரிவித்துள்ளார்.

From Around the web