வெற்றிமாறனுக்கு பிறகு மீண்டும் சுதாவுடன் கைக்கோர்க்கும் சூர்யா..!
 

 
சூர்யா மற்றும் சுதா கொங்குரா
சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து சுதா கொங்குரா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க சூர்யா முடிவு செய்துள்ளார்.

கடந்தாண்டு தீபாவளிக்கு ஓடிடியில் வெளியான படம் சூரரைப் போற்று. சுதா கொங்குரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, காளிதாஸ் ஆகியோருடைய நடிப்பில் வெளியான இந்த படம் தேசியளவில் வரவேற்பை பெற்றது.

இந்த படம் அடுத்ததாக ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அதையும் சுதா கொங்குரா தான் இயக்கவுள்ளார். அந்த படத்தின் மீதான இருந்து வந்த தடை நீங்கியதை தொடர்ந்து, விரைவில் அந்த படத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளை அவர் தொடங்கவுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக சூர்யா மற்றும் சுதா இணையவுள்ளனர். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படம் முடிவடைந்த உடன் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

அதை தொடர்ந்து சுதா இயக்கும் படத்தில் அவர் நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சூரரைப் போற்று படத்தை போல, இந்த படத்தையும் நடிகர் சூர்யாவே தயாரிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

From Around the web