வெற்றிமாறனை தொடர்ந்து சிறுத்தை சிவா உடன் இணையும் சூர்யா..!!

 
சூர்யா மற்றும் சிறுத்தை சிவா
அண்ணாத்த படத்தை இயக்கி வரும் சிறுத்தை சிவா அடுத்ததாக சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விபரங்களை விரிவாக பார்க்கலாம்.

நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ப்ரியங்கா அருள்மோகன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தென்காசி, குற்றாலம் போன்ற பகுதிகளில் இதற்கான ஷூட்டிங் நடந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு டி. இமான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்துக்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாத்த படம் நவம்பர் 4ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. அதை தொடர்ந்து இவர் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.

எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கிறார் சூர்யா. அதை தொடர்ந்து தான் சிறுத்தை சிவா இயக்கத்தில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web