இயக்குநர் ஷங்கர் மகளை கதாநாயகியாக களமிறக்கும் சூர்யா, ஜோதிகா..!

 
குடும்பத்தினருடன் இயக்குநர் ஷங்கர்

நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கும் புதிய படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

நடிகர்கள் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் உருவாகும் படம் விருமன். முத்தையா இயக்கும் இந்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் மூலம் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடிக்கிறார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் அதிதி ஷங்கருக்கு போஸ்டர் வெளியிட்டு விருமன் படத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் கிராமத்து பின்னணியில் உருவாகிறது. வரும் செப்டம்பர் 18-ம் தேதி முதல் விரும்பன் படத்துக்கான ஷூட்டிங் தேனியில் நடக்கிறது. அதற்கு முன்னதாக சென்னையில் படத்துக்கு பூஜை போடப்படுகிறது.

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி தற்போது நடித்து வருகிறார். அதனுடைய படப்பிடிப்பு பணிகள் முடிந்தவுடன் விருமன் படத்துக்கான ஷூட்டிங்கில் அவர் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

From Around the web