கொரோனாவுக்கு பயந்து ’சூர்யா 40’ படக்குழுவுக்கு சூர்யா போட்ட கட்டளை..!

 
சூர்யா 40 படக்குழு

இதுவரை புதுக்கோட்டையில் நடைபெற்று வந்த சூர்யா 40 படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் நடிகர் சூர்யாவின் அறிவுறுத்தலுக்கு பிறகு சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி வரும் படம் ‘சூர்யா 40. இன்னும் படத்துக்கு பெயர் வைக்காத நிலையில், இதனுடைய ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் சினிமா ஷூட்டிங் பணிகள் துவங்கியுள்ளன.

கொரோனாவின் தாக்கம் குறைந்து காணப்பட்டாலும், அதனுடைய தாக்கம் குறையவில்லை. ஊரடங்குக்கு முன்னதாக சூர்யா 40 படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது நடிகர் சூர்யா வெளியிடங்களுக்கு செல்ல விரும்பவில்லையாம்.

அதனால் சூர்யா 40 படப்பிடிப்பு பணிகள் சென்னையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. விரைவில் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web