ஜோதிகாவால் படத்தை விட்டு வெளியேறிய சூர்யா..புதிய ஹீரோவை புக் செய்த சுதா கொங்கரா..! 

 
1
 ’புறநானூறு’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

ஆனால் திடீரென இந்த படத்தின் கதையில் ஜோதிகா தலையிட்டதாகவும் ஹிந்தி எதிர்ப்பு குறித்த காட்சிகளை குறைவாக வைக்க வேண்டும் என்று சுதா கொங்கராவுக்கு ஜோதிகா நிபந்தனை விதித்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் சுதா கொங்கரா அதற்கு முடியாது என்று சொல்ல, சூர்யா இந்த படத்தில் விலகியதாக கூறப்பட்டது என்பதும் இந்த படம் கிட்டத்தட்ட ட்ராப் என்றும் கோலிவுட்டில் செய்திகள் வெளியானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சூர்யா நடிக்க இருந்த ’புறநானூறு’ கதையில் சூர்யாவுக்கு பதிலாக தற்போது துருவ் விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

’புறநானூறு’ திரைப்படத்தை சூர்யாவே தயாரிக்க இருந்த நிலையில் தற்போது லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன் வந்துள்ளதாகவும் விரைவில் தயாரிப்பு தரப்பில் இருந்து இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

From Around the web