குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா, கார்த்தி- சைக்கிள் ஓட்டிச் சென்று வாக்களித்த விஜய்..!!

 
குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா, கார்த்தி- சைக்கிள் ஓட்டிச் சென்று வாக்களித்த விஜய்..!!

நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தங்களுடைய குடும்பத்தாருடன் வந்து வாக்களித்த நிலையில், நீலாங்கரை வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் சென்று நடிகர் விஜய் வாக்களித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்காக வாக்குப்பாதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு பிரபலங்கள் பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து தங்களுடைய வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

நடிகர் அஜித் மற்றும் அவருடைய மனைவி ஷாலினி சென்னை திருவாயின்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அதை தொடர்ந்து நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் தங்களுடைய தந்தை நடிகர் சிவகுமார் மற்றும் குடும்பத்தினரோடு வந்து சென்னை தி.நகர் இந்தி பிரசார சபா வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்தனர்.

சென்னை நீலாங்கரையிலுள்ள வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளார் நடிகர் விஜய். அவர் சைக்கிள் ஓட்டியதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. எனினும், நடிகர் விஜய் சைக்கிள் ஓட்டும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 
 

From Around the web