சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பு நிறைவு..!!

 
1

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்து வருகிறார். மேலும் வினய் ராஜ், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி ஆகியோரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது. எனது தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ், எங்கள் ஹீரோ சூர்யா சார், ரத்னவேலு சார் மற்றும் எனது குழுவினர் அனைவரின் ஆதரவுக்காகவும் எனது மனமார்ந்த நன்றிகள். படத்தின் அப்டேட்டுகள் விரைவில் வெளிவரும்” என்று பதிவிட்டுள்ளார்.


 

From Around the web