சுஷாந்த் சிங் முன்னாள் காதலி பகீர் தகவல்..! 19 வயதில் அட்ஜெஸ்ட்மென்ட் ??

 
1

பவித்ர ரிஷ்டா என்ற ஹிந்தி மொழி தொடரில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் உடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் அங்கிதா லோகாண்டே.

மக்களின் மனம் கவர்ந்த அந்த சீரியலில் இந்த ஜோடியின் நடிப்புக்கு ஏரளமான ரசிகர்கள் இருந்தனர் அப்படியே நாட்கள் செல்ல இந்த ஜோடியின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

இதையடுத்து இருவரும் காதலித்து வந்த நிலையில் சில பல காரணத்தால் இருவரும் பிரிந்துவிட்டனர். பின்னர் சில வருடங்கள் கழித்து அங்கிதா லோகாண்டே விக்கி ஜெயின் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார் .

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அங்கிதா லோகாண்டே தனது கடந்த கால வழக்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் .

டிவி சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தேன். பின்னர் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனேன். அப்போது என்னை அழைத்து நீங்கள் தான் இந்த படத்தில் ஹீரோயின். நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் என்னிடம் சொன்னார்கள் .

அந்த சமயத்தில் எனக்கு வயது வெறும் 19 தான். அவர்கள் அப்படி சொன்னவுடன் ஒரு மாதிரி இருந்தது. நான் அவர்களை திட்டிவிட்டு அங்கு இருந்து அழுதுக்கொண்டே வந்துவிட்டேன் என அங்கிதா லோகாண்டே கண்ணீருடன் தெரிவித்துள்ளார் 

From Around the web