புது சீரியலில் கமிட்டான சுவாதி..! எந்த டிவியில் வருகிறார் தெரியுமா ?

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீசன் 2ல் நடித்தார் நடிகை சுவாதி. இவர் கன்னடத்தில் வெளியான சீரியல்களில் மட்டுமின்றி படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

ஆனாலும் ரசிகர்கள் பலரும் இவர் ஆண் போல இருப்பதாகவும், சரியாக நடிக்கவில்லை எனவும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவிட்டு வந்தார்கள். ஆனாலும் இவர் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், தற்போது நடிகை சுவாதி சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

குறித்த சீரியலுக்கு தேவதை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதோடு, இதற்கு முதல் இந்த சீரியலுக்கு வாரணம் ஆயிரம் என பெயர் வைக்கப்பட்டு தற்போது பெயர் மாற்றப்பட்டதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே 2சீரியலில் நடித்த கேப்ரில்லாவும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மருமகள் சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From Around the web