ஷூக்களை திருடிய ஸ்விக்கி டெலிவரி பாய்... சப்போர்ட் பண்ணிய பிரபல நடிகர்..!

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் வசதி மற்றும் பல உதவிகளை செய்து பிரபலமானவர் நடிகர் சோனு சூட்.அதற்குப் பிறகு அவர் செய்யும் உதவிகளை பார்த்து தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் அவர் வீட்டு வாசலில் குவிந்து காணப்பட்டார்கள்.
இந்த நிலையில், ஸ்விக்கி டெலிவரி செய்யும் நபர் ஒருவர் கஸ்டமர் வீட்டுக்குச் சென்று உணவை டெலிவரி கொடுத்துவிட்டு, வீட்டுக்கு வெளியே இருந்த ஷூக்களை திருடி சென்றுள்ளார். அந்த காட்சி சோசியல் மீடியாவில் வைரலானது.
இதனை பார்த்த நடிகர் சோனு சூட், தனது ஆதரவை குறித்த டெலிவரி பாய்க்கு தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அதில், டெலிவரி செய்யும் நபர் உணவை வழங்கிய பிறகு ஷூக்களை திருடி சென்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக அவருக்கு ஒரு ஜோடி ஷூக்களை வாங்கி கொடுங்கள். அது அவருக்கு தேவைப்பட்டதாக இருக்கலாம். அன்பாக இருங்கள் என பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு அவர் ட்விட் செய்துள்ள நிலையில், பலர் அவரை பாராட்டினாலும் ஒரு சிலர் நெகட்டிவ் கமெண்ட்களை முன் வைத்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
If Swiggy’s delivery boy stole a pair of shoes while delivering food at someone’s house. Don’t take any action against him. In fact buy him a new pair of shoes. He might be really in need. Be kind ❤️🙏
— sonu sood (@SonuSood) April 12, 2024