நாக சைத்தன்யா யாரு கூட போனா எனக்கென்ன..? சீறிய சமந்தா..!!
தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக இருந்த சமந்தா, நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைத்தன்யாவை 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில ஆண்டுகளில் இருவருக்குமிடையே ஏற்பட்ட மனக்கசப்பினால் விவகாரத்து பெற்றனர்.
இதற்கு ஃபேமிலி மேன் 2 வலை தொடரில் சமந்தா நடிக்கை படுக்கை அறை காட்சி தான் காரணம் என்று கூறப்பட்டது. விவகாரத்து பெற சில ஆண்டுகளில், சமந்தாவுக்கு மயோசைட்டீஸ் என்கிற நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக கடந்த ஓராண்டாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதற்கு முன்னதாக சமந்தா ஹைதராபாத்தில் இருக்க முடிவு செய்து, அங்கேயே ரூ. 15 கோடி மதிப்பில் ஒரு வீடு வாங்கினார். அதற்கு அருகாமையிலே நாக சைத்தன்யா வேறொரு வீட்டை வாங்கினார். இதனால் இருவரும் இணைந்து வாழ வாய்ப்புள்ளதாக ஆந்திர ரசிகர்கள் எதிர்நோக்கினர்.
இதற்கிடையில் நாக சைத்தன்யா பொன்னியின் செல்வன் புகழ் ஷோபிதா தூலிபாலாவை காதலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் சேர்ந்து லண்டன் சென்றதாக கூட செய்திகள் வெளிவருகின்றன.
இந்நிலையில் பிரபல தெலுங்கு ஊடகம் ஒன்று, யார் யாரை காதலிக்கிறார்கள் என்பதில் எனக்கு எந்த கவலையும் இல்லை. காதலை மதிக்காதவர்கள் நிச்சயம் கண்ணீர் சிந்துவார்கள். அந்த பெண்ணுக்காவது ஒரு நல்லது நடக்கட்டும் என்று சமந்தா சொன்னதாக கூறி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தது.
அதை டேக் செய்த சமந்தா, அப்படியொரு தகவலை நான் என்றும் வெளியிட்டதே கிடையாது என்பதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சமந்தா. இதனால் சமந்தாவும் நாக சைத்தன்யாவும் சேர்ந்து வாழ்வார்கள் என்கிற நம்பிக்கை மறைந்துபோய்விட்டதாக ரசிகர்கள் பலர் கருத்து கூறியுள்ளனர்.