உலக நாயகன் கமல்ஹாசனை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போங்க.. பிரபல அரசியல்வாதி கடும் விமர்சனம்..!

 
1

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் கிடைத்த பெருமைகளை பிக் பாஸ் மற்றும் அரசியல் மூலம் இழந்து வருவதாக விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி கூட வாங்காமல் திமுக கூட்டணிக்கு தனது ஆதரவு என்று முடிவு எடுத்துள்ள கமல்ஹாசனை அவரது சொந்த கட்சியினரே விமர்சனம் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனின் பிரச்சாரமும் சர்ச்சைக்குரிய வகையில் மாறிக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அவர் சமீபத்தில் பிரச்சாரம் செய்த போது மீண்டும் இந்தியாவில் மோடி ஆட்சி வந்துவிட்டால் நாக்பூர் தான் இந்தியாவின் தலைநகரமாக மாறும் என்று கூறி வருகிறார். 

ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் நாக்பூரில் இருப்பதால் தான் அவர் அவ்வாறு கூறுகிறார் என்று கூறப்பட்ட நிலையில் இதற்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ’கமல் மூளையை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிகிறது என்றும் அவரை ஒரு மெண்டல் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை பெற வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 ஒரே ஒரு சீட்டு கூட பெறாமல் திமுக கூட்டணிக்கு அவர் ஆதரவு கொடுத்ததிலிருந்தே அவரது மனநிலை குறித்து தெரிந்து கொள்ளலாம் என்றும் தனது கட்சியை அடமானம் வைத்துவிட்டு கமல்ஹாசன் பேசி வருகிறார் என்றும் கண்டிப்பாக அவரது மூளையை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு கமல் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

From Around the web