கையை கழுவுவதற்கு கல்யாணம் வரை பேசணுமா? டென்ஷன் செய்த ராய் லட்சுமி..!

 
கையை கழுவுவதற்கு கல்யாணம் வரை பேசணுமா? டென்ஷன் செய்த ராய் லட்சுமி..!

தமிழ் திரைத்துறையில் தங்களுடைய திருமண வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தராமல் தொழிலில் முன்னேற வேண்டும் என்கிற நோக்குடன் பல்வேறு நடிகைகள் உள்ளனர். அந்த வரிசையில் இருந்த நடிகை காஜல் அகர்வால் கடந்த வருடன் இல்லற வாழ்க்கையில் இணைந்தார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக அவருடைய திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அவருடைய திருமண விழாவில் பங்கேற்றனர். சினிமாத்துறையைச் சேர்ந்த யாருமே அவருடைய திருமணத்தில் பங்கேற்கவில்லை. எனினும், இன்ஸ்டாகிராமல் அவருக்கும் அவருடைய கணவருக்கும் வாழ்த்துகள் குவிந்தன.


இந்நிலையில் லட்சுமி ராயாக இருந்து ராய் லட்சுமியாக மாறிய நடிகை ராய் லட்சுமி இன்ஸ்டாவில் ஒரு பரபரப்பு பதிவை பதிவிட்டார். அதில். நிறைய பேர் தன்னிடம் திருமணம் குறித்து கேட்கின்றனர்.அ வர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியது தன்னுடைய கடமை. எனக்கு பிரைவசி உள்ளது. வரும் ஏப்ரல் 27-ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது. நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் பத்திரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு திடீரென எடுக்கப்பட்டுள்ளது. வருங்கால கணவருடன் இணைவது எனக்கு சந்தோஷம் என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து இந்த பதிவை நான் மற்றவரின் பதிவில் இருந்து எடுத்துள்ளேன். உங்களுக்கு நான் கூற விரும்புவது ஒன்றுதான். அது என்னவென்றால் உங்களுடைய கையை நன்றாக கழுவுங்கள். முடியவில்லை என்றால் சானிடைசர் போட்டுக்கொள்ளுங்கள். என்று நடிகை ராய் லட்சுமி அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இதன்மூலம் பதிவை படிப்பவர்களுக்கு வேறு வேலை இருந்தால், அதை பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். ராய் லட்சுமியின் இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

From Around the web