மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து தமன்னா நீக்கம்..?
தெலுங்கில் ஒளிபரப்பாகி வந்த மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகை தமன்னா அந்நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேசளவில் பிரபலமான நிகழ்ச்சி மாஸ்டர் செஃப். இந்தியாவில் ஹிந்தியில் ஒளிப்பரப்பாகி வந்த இந்நிகழ்ச்சி தமிழ் மற்றும் தெலுங்கில் முதன்முறையாக தயாரிக்கப்பட்டு ஒளிப்பரப்பாகி வருகிறது.
தமிழில் நடிகர் விஜய் சேதுபதியும் தெலுங்கில் தமன்னாவும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். தமிழில் ஓரளவுக்கு மாஸ்டர் செஃப் பிரபலமாகிவிட்டது. தொடர்ந்து டி.ஆர்.பி-யும் கிடைத்து வருகிறது.
ஆனால் தெலுங்கில் இந்நிகழ்ச்சிக்கு பெரியளவில் வரவேற்பு இல்லை. மோசமான ரேட்டிங்கும் கிடைத்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் நிகழ்ச்சிக்குழு தொப்பாளர் தமன்னாவை மாற்ற முடிவு செய்துள்ளார்களாம்.
அதன்படி புதியதாக இந்நிகழ்ச்சியை அனுசுயா என்கிற டிவி நடிகையை தொகுப்பாளினியாக்க முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 - cini express.jpg)