மகிழ்ச்சியில் தமன்னா- எல்லாவற்றுக்கும் காரணம் இதுதான்..!

 
தமன்னா

ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘நவம்பர் ஸ்டோரி’ வெப் சிரீஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது தொடர்பாக நடிகை தமன்னா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் தமன்னா நடிப்பில் நவம்பர் ஸ்டோரி என்கிற வெப் சிரீஸ் கடந்த வாரம் வெளியானது. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த தொடருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கிரைம் த்ரில்லர் கதைகளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் சிரீஸை விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியளவில் நவம்பர் ஸ்டோரி தொடருக்கு பல தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த தொடர் வெளியான முதல் வாரத்திலேயே மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். தமிழில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி தேசியளவில் வரவேற்பு பெற்ற முதல் வெப் சிரீஸ் என்கிற பெருமையை ‘நவம்பர் ஸ்டோரி’ பெற்றுள்ளது.

இந்த வெற்றியை குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை தமன்னா, இது மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. மக்கள் தொடர்ந்து வரவேற்பு அளிப்பது மகிழ்ச்சியை தருகிறது. நல்ல கதைகளத்துக்கு மொழி தடை இல்லை என்பதை இந்த வெப் சிரீஸ் உணர்த்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.

நவம்பர் ஸ்டோரி வெப் சிரீஸில் தமன்னாவுக்கு சொந்தமான இடத்தில் ஒரு கொலை நடக்கிறது. தமன்னாவின் தந்தை ஒரு கிரைம் நாவல் எழுத்தாளர் என்பதால் அவரை சந்தேகிக்கிறது போலீஸ். அந்த சந்தேகத்தில் இருந்து தமன்னா தனது தந்தையை எவ்வாறு மீட்கிறார் என்பதே கதைக்களம்.

இந்த தொடரில் தமன்னா அனுராதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய அப்பாவாக ஜி.எம். குமார் நடித்துள்ளார். மேலும் பசுபதி, அருள் தாஸ், விவேக் பிரச்சன்னா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
 

From Around the web