ஷங்கர் இயக்கும் படத்தில் தமன்னா..!

 
ராம்சரண்
தெலுங்கில் ஷங்கர் இயக்கும் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலில் உள்ளிட்டோர் நடிக்கும் நிலையில், தமன்னாவும் அந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியன் 2 பிரச்னை இன்னும் முடியவடையவில்லை. அதற்குள் ஷங்கர் இந்தி மற்றும் தெலுங்கில் படங்கள் இயக்குவதற்காக தயாராகி வருகிறார். முன்னதாக அவர் தெலுங்கில் படம் இயக்குகிறார்.

தில்ராஜூ தயாரிக்கும் இந்த படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு தமன்னா ஆடவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

தெலுங்கில் நேரடியாக தயாராகும் இந்த படத்தை தமிழ், இந்தியில் மொழிமாற்றம் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. மிக பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் தமன் இசையமைக்கிறார்.

From Around the web