‘ஜெயிலர்‘ பட காட்சிகளை இணையத்தில் பதிவிட்ட தமன்னா..!!
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ‘ஜெயிலர்‘ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன் , தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இதையடுத்து சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு கர்நாடகா, மங்களூருவில் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜெயிலர் படப்பிடிப்பு தள வீடியோவை நடிகை தமன்னா தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது. இப்படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
#Jailer https://t.co/AsEdd2LmXr pic.twitter.com/jVYYz6sRpP
— Prasanna (@tweetngrose) February 24, 2023