லஸ்ட் ஸ்டோரீஸில் ஆபாசமாக நடிப்பதற்கு கோடிகளில் சம்பளம் வாங்கிய தமன்னா..!!

லஸ்ட் ஸ்டோரீஸ் 2-வில் மிகவும் ஆபாசமாக நடிப்பதற்கு நடிகை தமன்னா கோடிகளில் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
tamannah

நெட்ஃப்ளிக்ஸ் தொடுதிரையில் கடந்த வாரம் வெளியான படம் ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’. மொத்தம் 4 கதைகள் கொண்ட இந்த ஆந்தாலஜி படத்தில் மிருனாள் தாகூர், கும்த் மிஷ்ரா, அங்கத் பேடி, அம்ருதா சுபாஷ், நீனா குப்தா, கஜோல், தமன்னா, விஜய் வர்மா, திலோத்தமா ஷோம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஒவ்வொரு கதையையும் ஆர். பால்கி, கொங்கனா சென் ஷர்மா, அமித் ரவீந்திரநாத் ஷர்மா, சுஜோய் கோஷ் உள்ளிட்டோர் இயக்கி இருந்தனர். கடந்த 29-ம் தேதி வெளியான இந்த படத்துக்கு ஓ.டி.டி பார்வையாளர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். குறிப்பாக அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கிய கதையில் விஜய் வர்மா, தமன்னா நடித்திருந்தனர்.

இந்த கதையில் தமன்னா நெருக்கமான ஆபாசக் காட்சிகளில் நடித்திருந்தார். விஜய் வர்மாவுடன் உணர்ச்சிவசப்பட்ட தனிமையில் இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தன. இது தென்னிந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. 

இந்நிலையில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 கதையில் நடிப்பதற்காக தமன்னா வாங்கியுள்ள ஊதியம் குறித்து தெரியவந்துள்ளது. வழக்கமாக ஒரு படத்தில் முழுநேரமாக நடிப்பதற்கு ரூ. 5 கோடி வரை ஊதியம் பெறும் தமன்னா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2-வில் குறிப்பிட்ட காட்சியில் நடிப்பதற்கு ரூ. 7 கோடி வரை ஊதியம் பெற்றுள்ளார். 

இதன்மூலம் தமன்னாவுக்கு சிறப்பான வருவாய் கிடைத்துள்ளதாகவே தெரிகிறது. இந்த படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல், அதற்குரிய ப்ரோமோஷன் பணிகளில் பங்கெடுக்கவும் தமன்னாவுக்கு தனியாக ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

From Around the web