அம்மாவை கட்டிப்பிடித்து கதறி அழுத தமன்னா..!

 
1

தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்த பாகுபலி படம், தமன்னாவை உலக அளவில் கவனிக்க வைத்தது. பாகுபலி படத்திற்கு பின்னர், தெலுங்கு திரையுலகிலும், ஹிந்தியிலும் பிசியாக மாறியுள்ளார்.அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதிலும் குறிப்பாக இவர் ஆடிய 'காவாலயா' என்ற பாடல் இவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இவ்வாறாக நடிப்பில் பிசியாக இருந்துவரும் தமன்னா சமூக வலைத்தளங்களிலும் எப்போதுமே ஆக்டிவாக காணப்படுவார்.

இவர் சமீபத்தில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக கூறப்பட்டது. அதன்பின் அவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது தனது அம்மாவை கட்டிப்பிடித்து கியூட்டாக அழுதுள்ளார் தமன்னா. 

குறித்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டு உள்ளார். மேலும் தனது நாய் குட்டி உடனும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

From Around the web