ஒரே நேரத்தில் வெளியாகும் 2 சூப்பர் ஸ்டார் படங்கள்- தமன்னா மகிழ்ச்சி..!!

இரண்டு சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் தமன்னா நடித்து இரு படங்களும் ஒரே நேரத்தில் வெளிவரவுள்ளன. இதுகுறித்து அவர் ஊடகங்களிடம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
 
 
tamannah

ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டிப் பறந்தவர் தமன்னா. அதேசமயத்தில் சில இந்திப் படங்களிலும் அவர் அவ்வப்போது நடித்து வந்தார். எனினும் சமீபமாக தமன்னா நடிப்பில் வெளியான படங்கள் பெரியளவில் வெற்றி அடையாமல் போய்விட்டன.

தற்போது அவர் தமிழில் ரஜினிகாந்துடன் ‘ஜெயிலர்’ மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘போலோ சங்கர்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.   இவ்விரு படங்களுமே ஒரு நாள் பின்னே, முன்னே என்று வெளிவருகின்றன. அதன்படி ஜெயிலர் படம் ஆகஸ்டு 10-ம் தேதியும், போலோ சங்கர் 11-ம் தேதி வெளிவருகிறது.

இதுதொடர்பாக பேசிய நடிகை தமன்னா, தென்னிந்திய சினிமாவின் பெரும் நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது. அவ்விரு படங்களும் ஒரேநேரத்தில் வெளியாவது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இப்படியொரு வாய்ப்பு யாருக்குமே கிடைக்காது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சம்பவம் அவ்வப்போது தான் நடக்கும். அதிலும் பெரும்பாலான சமயங்களுக்கு ஹீரோக்களுக்கு மட்டுமே அதுபோன்ற அரிய சம்பவங்கள் நடக்கும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் ஒரு ஹீரோயினான எனக்கு நடப்பது ஆச்சரியம் தான் என்று தமன்னா கூறினார்.
 

From Around the web