மும்பை ஏர்போட்டில் கண்கலங்கி நின்ற தமன்னா..!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, தற்போது லஸ்டு ஸ்டோரீஸ் என்கிற இணையதள ஆந்தாலஜி தொடரில் நடித்துள்ளார். இது வரும் 29-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவரவுள்ளது.
இதற்காக மும்பையில் பல்வேறு ஊடகங்களை சந்தித்து விளம்பரப் பணிகளில் தமன்னா உள்ளிட்ட வலை தொடர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் மும்பை விமான நிலையத்தில் இருந்து தமன்னா வெளியே வந்தார்.
அவரை ஊடகங்கள் பல புகைப்படம் எடுத்தன. அப்போது எதிர்பாராதவிதமாக ரசிகர் ஒருவர் அவருடைய காலில் விழுந்ந்தார். இதனால் நெகிழந்த தமன்னா, அவரை தடுத்து நிற்கவைத்தார். அவருடைய கையை பார்த்தபோது, அந்த நபர் தமன்னாவின் முகத்தை பச்சைக் குத்தி இருந்தார்.
இதனால் முற்றிலும் நெகிழ்ந்துபோன தமன்னா, அவருக்கு கொடுத்த பூங்கொத்து மற்றும் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு நன்றி கூறி நெகிழ்ந்தார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.