மனைவியை பிரியும் தமிழ் நடிகர்..!
 

 
1

ஜி.வி. பிரகாஷுக்கும், சைந்தவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் விவாகரத்து குறித்து அறிவிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது. இருவரும் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஜிவி மற்றும் சைந்தவி இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பள்ளிக் காலத்திலேயே காதலித்து வந்த இவர்கள், கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். 2020ஆம் ஆண்டு இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. தங்களது மகளுக்கு அன்வி என்று பெயர் வைத்தனர். தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமில்லாமல் திரை வாழ்க்கையில் இருவரும் சேர்ந்து பணியாற்றினார்கள். ஜிவி இசையமைத்த பல அழகான பாடல்களை தனது குரலின் மூலமாக மேலும் அழகாக்கியவர் சைந்தவி.

உதயம் என்.ஹெச் 4 படத்தில் யாரோ இவன், மயக்கம் என்ன படத்தில் பிறை தேடும், த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் என்னாச்சு ஏதாச்சு, தலைவா படத்தில் யார் இந்த சாலையோரம் ஆகியவை இருவரும் சேர்ந்து தங்களது குரலில் ரொமான்ஸ் செய்த பாடல்களாக அமைந்தன. தற்போது இவர்கள் விவாகரத்து பெற முடிவு செய்து இருப்பது சினிமா பிரபலங்களை மட்டுமில்லாமல், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

From Around the web