சுந்தர் பிச்சையின் சொந்த வீட்டை வாங்கிய பிரபல நடிகர்..!!

சென்னையில் சுமார் 20 ஆண்டுகள் வரை கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை வாழ்ந்த வீட்டை தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஒருவர் வாங்கியுள்ளார்.

 
sundar pichai

உலகளவில் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தி வரக்கூடிய நிறுவனம் கூகுள். இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பவர் தமிழரும் சென்னையைச் சேர்ந்தவருமான சுந்தர் பிச்சை. 

மதுரையில் பிறந்த இவர் சென்னை அசோக் நகரில் தான் வளர்ந்தார். சுமார் 20 ஆண்டுகள் வரை அவர் அசோக் நகர் வீட்டில் வசித்ததாக சொல்லப்படுகிறது. சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற போது கூட, அவருடைய தாயும் தந்தையும் அந்த வீட்டில் தான் இருந்தனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் க்ரீன் கார்டு ஹோல்டராகிவிட்ட சுந்தர் பிச்சை, தனது தந்தையிடம் சென்னையில் இருக்கும் வீட்டை விற்றுவிடும்படி கூறியுள்ளார். அதையடுத்து அவருடைய தந்தையும் தான் வசித்து வந்த வீட்டை விற்றுவிட்டார்.

sundar pichai home

அவரிடம் இருந்து வீடு வாங்கியவர் சி. மணிகண்டன். இவர் தமிழ் சினிமாவில் நடிகருமாகவும் தயாரிப்பாளராகவும் உள்ளார். அவர் சுந்தர் பிச்சையின் அசோக் நகர் வீட்டை இடித்துவிட்டு தனியாக வில்ல கட்டவுள்ளதாக கூறப்படுகிறது.
 

From Around the web