கைதி ரீமேக்கில் நடிக்கும் பிரபல கதாநாயகி- பங்கமாக கலாய்க்கும் தமிழ் ரசிகர்கள்..!

 
கைதி இந்தி ரீமேக்

இந்தியில் தயாராகும் கைதி ரீமேக்கில் தனியாக கதாநாயகி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தர படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான கைதி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டதற்கும் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை அளித்தனர். தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

கைதி இந்தி ரீமேக்கில் கதாநாயகனாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் கைதி தமிழ் படத்தில் கதாநாயகி கிடையாது. ஆனால் இந்தியில் கதாநாயகிக்கு என்று தனியாக காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாம். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான தகவல் வெளியானதை தொடர்ந்து கைதி படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அது தேவையற்ற வேலை, தனியாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் படத்தின் உயிர் செத்துவிடும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

From Around the web