கொரோனா பாதித்த தமிழ் திரைப்பட இயக்குநர் பரிதாப மரணம்..!

 
கொரோனா பாதித்த தமிழ் திரைப்பட இயக்குநர் பரிதாப மரணம்..!

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க படைப்புகளை வழங்கிய இயக்குநர் தாமிரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

தமிழ் திரையுலகின் இயக்குநர் சிகரம் என்று கொண்டாடப்பட்ட மறைந்த இயக்குநர் பாலசந்திரனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் தாமிரா. கடந்த 2010-ம் ஆண்டு இவர் முதன்முதலாக இயக்கிய ‘ரெட்டைச் சுழி’ படத்தில் பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜாவை சேர்த்து நடிக்க வைத்தார்.

அதை தொடர்ந்து சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் நடித்த ‘ஆண் தேவதை’ படத்தை கடைசியாக இயக்கி இருந்தார் தாமிரா. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதை தொடர்ந்து நிலைமை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை இயக்குநர் தாமிரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மரணம் தமிழக திரையுலகத்தினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதை தொடர்ந்து தாமிராவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

From Around the web