தமிழ் படம் படுதோல்வி... ரூட்டை மாற்றிய தல தோனி..! 

 
1
பிரபல கிரிக்கெட் வீரர் தோனி கடந்த 2023ஆம்  ஆண்டு ’தோனி என்டர்டைன்மென்ட்’ என்ற நிறுவனத்தை தொடங்கிய நிலையில் அதன் மூலம் திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக அறிவித்தார். அவரது மனைவி சாக்சி அனைத்து தயாரிப்பு பணிகளையும் செய்த நிலையில் ’எல்ஜிஎம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட தமிழ் படம் தயாரானது என்பதும் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு தோனி மற்றும் சாக்சி ஆகிய இருவருமே மிகப்பெரிய அளவில் புரமோஷன் செய்தும் படம் மிக மோசமான தோல்வியை அடைந்ததாக கூறப்பட்டது. கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த படம் வெறும் 8 கோடி மட்டுமே வசூல் ஆனதாகவும் கிட்டத்தட்ட 12 கோடி நஷ்டம் என்றும் கூறப்பட்டது.

இதனை அடுத்து இனிமேல் தமிழ் திரைப்படம் பக்கமே செல்லக்கூடாது என்று முடிவு செய்த தோனி தற்போது அடுத்த கட்டமாக ஒரு கன்னட படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அது குறித்து அறிவிப்பு மிகவும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தோனியின் இரண்டாவது திரைப்படமும் ஒரு சின்ன பட்ஜெட் படம் தான் என்றும் ஆனால் அழுத்தமுள்ள கதையம்சம் கொண்ட படம் என்று கூறப்படுகிறது. தமிழில் ஏற்பட்ட நஷ்டத்தை கன்னடத்தில் அவர் மீட்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

From Around the web