உள்ளாடை அணியாமல் உச்சக்கட்டம் காட்டிய டாப்ஸி..!!
 

சினிமாவில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிக்கும் டாப்ஸி, திடீரென ஃபேஷன் துறையில் கவர்ச்சிக்கு மாறியது ஏன்? என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். 
 
taapsee pannu fashion lakme week

நிகழ்ச்சி அரங்கில் உள்ளாடை எதுவும் அணியாமல் வந்து உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து, ஃபேஷன் உலகையே அதிரவைத்துள்ளார் நடிகை டாப்ஸி.

டெல்லியைச் சேர்ந்த டாப்ஸி தெலுங்கு படம் மூலம் சினிமா துறையில் கால்பதித்தார். அதையடுத்து தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகானவர், தொடர்ந்து தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்தார். கடந்த  2016-ம் ஆண்டு அமிதாப் பச்சனுடன் அவர் நடித்த ’பிங்க்’  என்கிற இந்திப் படம் நாடு முழுவதும் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதையடுத்து அவர் தொடர்ந்து இந்திப் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார். எனினும் அனாபெல் சேதுபதி, கேம் ஓவர் போன்ற தமிழ் படங்களில் அவ்வப்போது நடித்தார். தற்போது கூட ஜனகன மன மற்றும் ஏலியன் என்று இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இந்திப் படங்களில் நடிக்க சென்றவுடன் பல நடிகர்/ நடிகைகள் தென்னிந்திய சினிமாக்களை மறந்துவிடுவார்கள்.

taapsee pannu

ஆனால் டாப்ஸ் சற்று வித்தியாசமானவர். இந்தி படங்களில் நடித்து 2 ஃபிலிம்பேர் விருதுகள், ஒரு ஐஃபா விருது போன்ற அங்கீகாரங்களை பெற்று முன்னணி நடிகையாக இருந்தபோதிலும், அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். குறிப்பிட்ட படங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றார் போன்று, அவர் தனது சம்பளத்தையும் மாற்றிக்கொள்வதாக கூறப்படுகிறது.

திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த டாப்ஸி, தற்போது புதியதாக மும்பையில் நடைபெறும் செலிபிரிட்டி ஃபேஷன் ஷோக்களில் ‘ஷோ ரன்னராக’ கால்பதித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு ஃபேஷன் ஷோவில் உள்ளாடை எதுவும் போடாமல், வயிறு வரை கீலிவேஜ் காட்டியபடி, சிவப்பு நிற கவுனினில் அவர் ஒய்யாரமாக நடந்து வந்த சம்பவம் பாலிவுட்டையே அதிரவைத்துள்ளது. 

taapsee pannu

பொதுவாக டாப்ஸி குடும்ப பாங்கான, பெரியளவில் கவர்ச்சி ஆடை அணிய தேவையில்லாத கதாபாத்திரங்களில் தான் இதுவரை நடித்துள்ளார். முதன்முறையாக அவர் இப்படியொரு போல்டான ஆடையில் ரேம் வாக் செய்தது, ஒட்டுமொத்த ஃபேஷன் உலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதன்மூலம் ஃபேஷன் துறையில் கவர்ச்சிக்கு மாறியுள்ள டாப்ஸி, திரைப்படங்களிலும் கிளாமராக நடிப்பரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 
 

From Around the web